Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

3 கிலோ வௌ்ளிப்பொருட்கள் கொள்ளை.. பரபரப்பு

கிருஷ்ணகிரி அருகே 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே சரவணன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையின் சுவரை துளையிட்டு 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை அடித்துள்ளனர். 3 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிவிட்டு, இரும்பு லாக்கரை உடைத்து தங்க நகைகளையும் திருட முயன்றுள்ளனர். லாக்கரை கொள்ளையர்களால் திறக்க முடியாததால் 2 கிலோ தங்க நகைகள் தப்பின. 3 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றவர்களுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அடுத்தடுத்து நடைபெறும் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கவும், பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இரவு நேரப் ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!