Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுபான வேன் கவிழ்வு: ரூ.10 லட்சம் மதுபாட்டில்களை அள்ளிச்சென்ற மக்கள்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பசிவிரெட்டிப்பள்ளி அருகே, மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென வேனின் டயர் பஞ்சரானதால், கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் இருந்த நூற்றுக்கணக்கான மதுபான பெட்டிகள் சாலையில் கொட்டி சிதறின. விபத்து பற்றி தகவலறிந்து சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாலையில் கொட்டிக்கிடந்த மதுபாட்டில்களைப் பார்த்ததும், முதலில் வந்தவர்கள் பெட்டி பெட்டியாக தூக்கிச் சென்றனர். பெட்டிகள் கிழிந்து பாட்டில்கள் சிதறியதால், அங்கிருந்த ஆண்கள் தங்களது லுங்கி, டவல்களிலும், பெண்கள் தங்களது புடவைகளிலும் மதுபாட்டில்களை போட்டி போட்டு அள்ளிப்போட்டுக்கொண்டு ஓடினர்.

ஆண்களுக்கு இணையாக பெண்களும் மதுபாட்டில்களை அள்ளுவதில் தீவிரம் காட்டினர். சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!