திருச்சி மலைக்கோட்டை பட்டர்வர்த்ரோடு பகுதியில் ஒரு பூங்கா அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கோட்டை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகலறிந்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சாண்டி என்ற சக்திவேல் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதேபோல் பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியில் ஒரு டீக்கடை அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக காஜா பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது சிலர்ஷா (24), மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (23 ),சமயபுரம் பகுதியைச் சேர்ந்த குரு என்ற மணிகண்டன் (25 )ஆகியோரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் 512 போதை மாத்திரைகள் 4 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள்,ரூ.25 ஆயிரத்து 150 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
