அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார் . அவர் கூறியதாவது… இபிஎஸ் கேட்டுக் கொண்டதால் எம்எல்ஏக்கள் 21பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை”. “21 எம்எல்ஏக்களின் வருத்தத்தை ஏற்று இபிஎஸ் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை இல்லை”. இபிஎஸ் கேட்டுக் கொண்டதால் அதிமுக எம்எல்ஏக்கள் 21பேரின் பதவி தப்பியது. எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கரின் எம்எல்ஏ பதவி தப்பியது. கட்சித்தாவல் தடைச்சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பினர் 21 எம்எல்ஏக்கள். “அதிமுக கொறடா உத்தரவை மீறிய எம்எல்ஏக்கள் 4 பேர் மீதான நடவடிக்கை துவங்கியுள்ளது”. எம்எல்ஏக்கள் 4பேர் மீதான நடவடிக்கை முடிந்ததும் அறிவிப்பேன் – என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.
