தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார். நெடுஞ்சாலை, சிறு துறைமுகத்துறை செயலாளராக இருந்த செல்வராஜ் பொதுப்பணி துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணி முதன்மை செயலாளர் சுன்சுங்கம் ஜடக் சிரு, நெடுஞ்சாலை, சிறு துறைமுகத்துறை முதன்மை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளராக சந்தீப் நந்தூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கைத்தறித்துறை இயக்குநராக உமா மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநராக பிரதீப்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பணியாளர் தேர்வாணைய தலைவராக அழகு மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். காதி மற்றும் கிராமத்தொழில் மேம்பாட்டு வாரிய செயலாளராக சுரேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி வருவாய், நிதித்துறை துணை ஆணையராக சித்ரா விஜயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
