அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் மும்முனை மின்சாரம் தட்டுப்பாட்டால் தா.பழூர், இடகண்ணி, சோழமாதேவி, கோடாலி கருப்பூர், குறிச்சி, தாதம்பேட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெல் சாகுபடி, தண்ணீர் இன்றி ஐந்தாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
குறுவை நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூபாய் 40 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க கோரி தா.பழூர் கடைவீதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருகிப்போன பயிர்களுடன் மறியல் போராட்டம் நடத்தினர். விவசாயிகள் போராட்டம் காரணமாக ஜெயங்கொண்டம் – கும்பகோணம்

சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து தா.பலூர் போலீசார் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். வேளாண் துறை அதிகாரிகளை சந்தித்து

முறையிடுமாறு, போலீசார் விவசாயிகளை கேட்டுக் கொண்டதை யடுத்து, விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர். அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகள் குடும்பத்தோடு தீக்குளிப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
நீண்ட வரிசையில் காத்து நின்ற வாகனங்கள் பயணித்த பொதுமக்கள் மிகவும் அவதியுற்றனர்.
