திருவோணம் அருகே கல்லூரி மாணவி மர்ம மரணம்… அவசர அவசரமாக உடலை எரித்த உறவினர்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள வெள்ளத்தேவன்விடுதி பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவரது மகள் அனுசியா (17).
இவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சேர்ந்து மூன்று நாட்களை ஆன நிலையில் திடீரென மாணவி தனது வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.
அதிகாலையில் மாணவி சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பாட்டி உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மாணவியின் உடலை உறவினர்கள் அவசர அவசரமாக மயானத்திற்கு கொண்டு சென்று எரித்துள்ளனர்.
மாணவியின் மரணம் குறித்து உள்ளூர் கிராம நிர்வாக அதிகாரிக்கோ போலீசார்க்கோ தகவல் தெரிவிக்காத நிலையில் மாணவி கடும் வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி சடலத்தை எரித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இயற்கைக்கு மாறான மரணம் அடைந்த மாணவியின் இறப்பு குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்காததை தொடர்ந்து உஞ்சியவிடுதி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
