மராட்டியத்தின் நாக்பூர் நகரை சேர்ந்த இந்திய விமான படை அதிகாரி ஒருவரின் மனைவியை மது குடிக்க வைத்து, பாலியல் வன்கொடுமை செய்து, மிரட்டி, மதமாற்றம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 24 வயது இளம்பெண் தன்னுடைய முன்னாள் பள்ளி தோழருடன் தொடர்ந்து பழகியுள்ளார். அவர் அழைத்த நிலையில், வார்தா சாலையில் உள்ள ஓட்டலுக்கு இளம்பெண் சென்றார். இதுபற்றி காவல் துறையின் துணை ஆணையாளர் ரிஷிகேஷ் ரெட்டி கூறும்போது, அவர்கள் அயாஸ் தாஜ் மதரே மற்றும் கூட்டாளி அமீன் ஷேக் என அடையாளம் காணப்பட்டனர். ஹஜ்ரத் என்ற மத தலைவர் (மவுலானா) தப்பியோடி விட்டார். அவரை தேடி வருகிறோம் என கூறினார்.அந்த இளம்பெண்ணும், குற்றவாளியும் சொத்துகளை விற்பனை செய்யும் டீலர்களாக இருந்துள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஓட்டலில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண்ணுக்கு கொடுத்து விட்டார். இதில், அவர் சுயநினைவை இழந்து விட்டார்.
இதன்பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் எடுத்து வைத்து கொண்டு, பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதில், அவருடன் நண்பர்களும் சேர்ந்துள்ளனர். இதுவரை ரூ.4 லட்சம் பணம் தரப்பட்டு உள்ளது. மதம் மாறவும் இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து வீட்டுக்கு பல முறை சென்று இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
தொடக்கத்தில் பயத்தில் இருந்த அந்த இளம்பெண், பின்னர் கணவரிடம் நடந்த விசயங்களை கூறியிருக்கிறார். அவர்கள் நாக்பூர் நகரின் சோனேகாவன் போலீசில் புகார் அளித்துள்ளனர். எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, 2 பேர் கைது செய்யப்பட்டனர். மவுலானாவை தேடி வருகின்றனர்.
