Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜூன் 22-ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குத் தற்காலிக தடை

இந்தியாவில் Telegram செயலி தற்காலிகமாக தடை செய்யப்பட்டதை காட்டும் Telegram லோகோ மற்றும் மொபைல் திரை காட்சி

நீட் (NEET-UG) மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வினாத்தாள் கசிவு மற்றும் மோசடிகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. தேசிய தேர்வு முகமையின் (NTA) பரிந்துரையின் பேரில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69A-ன் கீழ் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, ஜூன் 22-ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்த முழுமையாகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முடிந்த பிறகு பழைய பதிவுகளை மாற்றி “வினாத்தாள் முன்பே கசிந்தது” போன்ற போலி பிம்பங்களை உருவாக்கி மோசடி செய்வதைத் தடுக்க, ஏற்கனவே அனுப்பப்பட்ட செய்திகளைத் திருத்தும் வசதியும் (Message-Editing Feature) ஜூன் 30-ஆம் தேதி வரை முடக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!