Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவிகளை வியப்பில் ஆழ்த்திய காவல் துறை மோப்ப நாய்களின் சாகசங்கள்

காவல் துறை மோப்ப நாய்களின் சாகசங்கள்- மாணவிகள் வியப்பு

கரூர் மாவட்ட காவல் துறை சார்பில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காவல் துறையின் மோப்ப நாய்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு காவல் துறையின் மோப்ப நாய்கள் அழைத்து வரப்பட்டன. அங்கு நடைபெற்ற

நிகழ்ச்சியில் குற்றப் பிரிவு விசாரணைகளில் பயன்படுத்தப்படும் லக்கி, குறிஞ்சி ஆகிய மோப்ப நாய்களும், வெடிகுண்டு கண்டறியும் பிரிவில் பணியாற்றும் சன்னி, புயல் ஆகிய மோப்ப நாய்களும் தங்களது சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தின.

மைதானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை சன்னி மற்றும் புயல் மோப்ப நாய்கள் துல்லியமாக கண்டறிந்து காட்டியதுடன், குற்றவாளிகள் விட்டுச் செல்லும் தடயங்களை மோப்பம் பிடித்து எவ்வாறு கண்டுபிடிக்கின்றன என்பதை லக்கி மற்றும் குறிஞ்சி ஆகிய

நாய்கள் செயல்முறை விளக்கமாக செய்து காட்டின.

பயிற்சியாளர்கள் வழங்கிய கட்டளைகளுக்கு மிகவும் கச்சிதமாக கீழ்ப்படிந்து மோப்ப நாய்கள் நிகழ்த்திய சாகசங்கள் மாணவ-மாணவிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. ஒவ்வொரு

நிகழ்வையும் மாணவிகள் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் காவல் துறையின் பணிகள், மோப்ப நாய்களின் பங்களிப்பு மற்றும் அவற்றின் திறன்கள் குறித்து மாணவிகள் நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. காவல் துறையின் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி மாணவிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

error: Content is protected !!