Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம்- பதிவுகளும் நீக்கம்

நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம்; பழைய பதிவுகளும் நீக்கம்

கடந்த ஆட்சியில் திமுக அரசால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம் தற்போது தவெக அரசில் ‘திறன் தமிழ்நாடு’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

‘நான் முதல்வன்’ திட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான தனி பிரிவை இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி தொடங்கி வைத்தார். மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை தமிழக இளைஞர்கள் எளிதாக அணுகும் வகையில் பல பயிற்சி திட்டங்களை இந்த பிரிவு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி, மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கிப் பணி ஆகிய தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படும்.

இந்நிலையில் கடந்த ஆட்சியில் திமுக அரசால் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு திறன் பயிற்சிகளையும், வேலை வாய்ப்புகளையும் வழங்கிவந்த நான் முதல்வன் திட்டம் தற்போது தவெக அரசில் ‘திறன் தமிழ்நாடு’ (TNSKILL CORPORATION) என பெயர் மாற்றப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் தொடர்பாக பதிவிட்ட பழைய பதிவுகள் மற்றும் வீடியோக்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!