Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று லக்னோவில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், சுப்மன் கில் (154 ரன்கள்) மற்றும் இஷான் கிஷன் (125 ரன்கள்) ஜோடி அபாரமாக விளையாடி சதமடித்து அசத்தியது. இதன் மூலம் இந்திய அணி 49.5 ஓவர்களில் 402 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நங்கேயாலியா கரோட்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து 403 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறியது. ரஹ்மத் ஷா மட்டும் அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்தார். இறுதியில், 44.3 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 232 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 170 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இப்போதே கைப்பற்றி அசத்தியுள்ளது.

error: Content is protected !!