தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு வட கடலோர மாவட்டங்களில் பரவலாக திடீர் மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை 10 மணி வரை மிதமான மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் நீடித்து வந்த சூழலில், இந்த திடீர் மழை மாற்றமானது சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்ட பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும், குளுமையான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.
