நீட் (NEET) தேர்வுக்குத் தயாராகி வந்த சேலத்தைச் சேர்ந்த மாணவி கோபிகா, தேர்வு பயத்தால் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தகுதி என்ற பெயரில் திணிக்கப்பட்ட நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், பயிற்சி மையக் கொள்ளை, அச்சுறுத்தும் சோதனை முறைகள் என ஒரு மாபெரும் உயிர்க்கொல்லும் ஊழலாக (Scam) மாறியுள்ளது” என்று மத்திய அரசைச் சாடியுள்ளார்.
மேலும், இந்த மோசடியான நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், நீட் ஒழிப்பிற்காக முந்தைய திமுக அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும், சட்டப் போராட்டங்களையும் தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழக) அரசு எந்தவித சமரசமும் இன்றித் தொடர வேண்டும் என்றும் தனது பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
