கோவை கிணத்துக்கடவு அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், அஸ்வின் (22) என்ற இளைஞரை சுத்தியல் மற்றும் கத்தியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தை மாதேஷ் (22) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். தப்பியோடிய இரு குற்றவாளிகளையும் விரைந்து கைது செய்ய கிணத்துக்கடவு காவல் துறையினர் 2 தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவையில் இளைஞர் சுத்தியலால் அடித்துக்கொலை
