Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயங்கி விழுந்து முதியவர் சாவு… திருச்சி போலீஸ் விசாரணை…

Tamil Nadu police personnel conducting an investigation near Thanjavur Nanjikottai bridge after a fatal collision involving a motorcycle on June 12 2026

திருச்சி உறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கடந்த 12ந்தேதி கிடந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இறந்த முதியவருக்கு சுமார் 70 வயது இருக்கும்.அவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் இந்த சம்பவம் குறித்து கே சாத்தனூர் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!