திருச்சி திருவக்குடி மலை பெரியார் திடலை சேர்ந்தவர் ராஜா (வயது 61) இவர் தச்சு தொழிலாளி. இந்நிலையில் கடந்த 2026ம் ஆண்டு திருவரங்கம் பகுதியை சேர்ந்த ஒரு என்ஜினியரிடம் உள்கட்டமைப்பு பணிகளை ராஜா ஒப்பந்த அடிப்படையில் எடுத்து வேலை செய்து வந்தார். அதற்கு தேவையான பொருட்களை அவர் தன் சொந்த பணத்தில் வாங்கினார். பிறகு செலவழித்த தொகையையும் கூலியையும் அந்த என்ஜினியரிடம் திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அந்த என்ஜினியர் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரிடம் கார்த்தி கேட்ட பொழுது கடுமையான வார்த்தைகளால் திட்டி என்ஜினியர் மிரட்டி உள்ளார். இது குறித்து கார்த்தியின் சகோதரி திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் என்ஜினியர் மற்றும் அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. இவர் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பினார். இதை கேள்விபட்ட ஏஜென்சி நடத்தி வந்த நபர் கார்த்தியை அணுகிவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பி வெளிநாட்டு வேலைக்கு செல்ல ரூபாய் 4.5 லட்சம் பணத்தை ஏஜென்சி நடத்தி வரும் நபரிடம் கொடுத்து உள்ளார். இதனை அடுத்து அந்த நபர் பணத்தை வாங்கிக் கொண்டு கார்த்தியை சீனாவிற்கு வேலைக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே திருப்பி அனுப்பி விட்டனர் கார்த்தி தனது கணக்கை கேட்ட பொழுது ஒரு லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது.
இது குறித்து கார்த்தியின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
