மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது
திருச்சி திருவானைக்காவல் ட்ரங் ரோடு பகுதியில் மூன்று வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிள் உடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற ஸ்ரீரங்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிளை சோதனைக்கு உட்படுத்தியபோது, சீட் கவரில் 260 கிராம் கண்டுபிடிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து அந்த மூன்று வாலிபர்களையும் ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர் கைதானவர்கள் அரியலூர் மாவட்டம் கருப்பூர் பொய்யூர் தெற்கு தெருவை சேர்ந்த கோகுல்ராஜ் வயது 21 கருப்பூர் குலமாணிக்கம் வேந்தன் தெரு அஜித் 19 கருப்பூர் கீழப்பழுவூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் 20 என்பது தெரியவந்தது அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது இதே போன்று உறையூர் போலீசார் கஞ்சா விற்ற உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெருவை சேர்ந்த உசேன் பாஷா வயது 27 முகமது இர்பான் 22 ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர் அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது மேலும் பணம் வைத்து சூதாடிய திருச்சி அரியமங்கலம் அண்ணா நகர் அம்பிகாபுரம் மேல் அம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் 39 அரியமங்கலம் நேருஜி நகர் காந்தி தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் ராஜ் 25 ஆகிய இரண்டு பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர் அவர்களிடமிருந்து பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
போலி பாஸ்போர்ட் வழக்கில் மலேசியா பயணி சிக்கினார்
சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரி செல்லியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் காலித் ஹாலித் (வயது 57) இவர் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார் அப்போது இமிகிரேஷன் அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர் அப்போது போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்தது அதைத் தொடர்ந்து இமிக்கிரேஷன் அதிகாரிகள் விமான நிலைய போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர் போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
