Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் 71-வது ரயில்வே வார விழா கோலாகலம்:

திருச்சியில் 71-வது ரயில்வே வார விழா கோலாகலம்:

திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் சார்பில் 71-வது ரயில்வே வார விழா மற்றும் ரயில் சேவா புரஸ்கார் விருது வழங்கும் விழா திருச்சியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவில், தங்களது பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் திறம்படச் செய்த 33 ரயில்வே ஊழியர்களுக்கு உயரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதாகத் தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ரயில் மஹால் திருமண மண்டபத்தில் இந்த 71-வது ரயில்வே வார விழா மற்றும் ‘ரயில் சேவா புரஸ்கார்’ விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) பாலக் ராம் நெகி தலைமை தாங்கிச் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் திருச்சி கோட்டத்தின் சாதனைகளைக் குறிப்பிட்டதோடு, பயணிகள் சேவையில் அர்ப்பணிப்புடன் விளங்கிய 33 ஊழியர்களை நேரில் பாராட்டி, அவர்களுக்கு ‘ரயில் சேவா புரஸ்கார்’ விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார். இந்த விழாவில் உயர் ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெருந்திரளாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

error: Content is protected !!