Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை சிறுமி வன்கொடுமை வழக்கு… குற்றவாளிகளிடம் விசாரணை துவக்கம்

சிறுமி வன்கொடுமை வழக்கு-குற்றவாளிகளிடம் விசாரணை துவக்கம்

கோவை மாவட்டம் சூலூர் அருகே கடந்த மே மாதம் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியத் திருப்பமாக சாட்சி விசாரணை இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இந்த அதிர்ச்சி ஊட்டும் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது.

இக்கொடூரக் குற்றம் தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு கடந்த ஜூன் 10ம் தேதி நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையைத் (Charge Sheet) தாக்கல் செய்தனர். இந்த வழக்கை வலுப்படுத்துவதற்காகப் புலனாய்வு அதிகாரிகள் பல்வேறு அறிவியல் பூர்வ ஆதாரங்களையும், சுற்றுவட்டாரப் பகுதி சாட்சியங்களையும் திரட்டினர்.

அதன்படி, இந்த வழக்கில் மொத்தம் 104 பேர் முக்கியச் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சாட்சிகளிடம் நீதிமன்றக் காவலில் விசாரணையைத் தொடங்கத் திட்டமிடப்பட்டு, இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்குத் தொடர்ச்சியாகச் சாட்சி விசாரணை நடைபெற உள்ளது. நீதிமன்றத்தில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் துரிதப்படுத்தப்படவுள்ளன.

error: Content is protected !!