திருச்சி அதிமுகவில் 4 மாவட்ட செயலாளர்கள் நியமனம்
புறநகர் வடக்கு தெற்கு, கிழக்கு என பிரிப்பு
திருச்சி, ஜூன் 26-
தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பின் சீரமைக்கப் பட்ட திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுகவில், திருவரங்கம், மணப்பாறை, திருவெறும்பூர், லால்குடி ஆகிய 4 தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், நிர் வாக வசதிக்காக, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம் என 2 ஆக பிரிக்கப்பட் டுள்ளது. தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், கிழக்கு மாவட்ட செயலாளராக புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த சிவக்குமார் நியமிக்கப்பட் டுள்ளனர். ஏற்கெனவே திருச்சி மாநகர், மாவட்ட செயலாளராக இன்ஜினியர் கார்த்திகேயன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக யோகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், திருச்சி மாவட்டத்தில் அதிமுக 4 மாவட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது.
திருச்சி மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞ ரணி இணைச் செயலாளராக இருந்த சுரேஷ்குமார், ஜெ.பேரவை மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட் டுள்ளார். இதற்கான அறிவிப்பை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
