கரூரில் துணை சுகாதார நிலையம் மற்றும் புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் விஜயலட்சுமி திறந்து வைத்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொட்டம்பட்டி கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தையும், ஈசநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 புதிய வகுப்பறை கட்டிடங்களையும் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தலைமை நடைபெற்ற நிகழ்ச்சியில். புதிய கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர், அரசின் கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டுத்

திட்டங்கள் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
