சென்னை: உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த புகார்கள் மீது விசாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ‘இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமித்திடுக’ எனவும் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “உதவிப் பேராசிரியர் எழுத்துத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கடந்த 25.6.2026 வியாழக் கிழமையன்று அறிவித்ததைத் தொடர்ந்து, விளக்கக் கட்டுரைகளின் மதிப்பீட்டில் பெரும் அளவிலான முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
புறநிலை வினாத்தாளில் அதிக மதிப்பெண் பெற்ற பல தேர்வர்கள், விளக்கக் கட்டுரைப் பிரிவு தேர்வில் 42 தேர்வர்கள் ‘0’ மதிப்பெண்ணும் மற்றும் 106 தேர்வர்கள் ஒரு மதிப்பெண்ணும் பெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கி
சென்னை: உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த புகார்கள் மீது விசாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ‘இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமித்திடுக’ எனவும் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “உதவிப் பேராசிரியர் எழுத்துத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கடந்த 25.6.2026 வியாழக் கிழமையன்று அறிவித்ததைத் தொடர்ந்து, விளக்கக் கட்டுரைகளின் மதிப்பீட்டில் பெரும் அளவிலான முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
புறநிலை வினாத்தாளில் அதிக மதிப்பெண் பெற்ற பல தேர்வர்கள், விளக்கக் கட்டுரைப் பிரிவு தேர்வில் 42 தேர்வர்கள் ‘0’ மதிப்பெண்ணும் மற்றும் 106 தேர்வர்கள் ஒரு மதிப்பெண்ணும் பெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் உள்ள
மாமல்லபுரத்தில் திடீர் கடலரிப்பு: மீனவர்கள் அச்சம்’
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் ஆனி மாத சனி பிரதோஷம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்’
திருவொற்றியூரில் கால்வாய் அடைப்பால் தெருவில் கழிவுநீர் தேக்கம்’
குடிநீர் வழங்க வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: பொன்னேரியில் பரபரப்பு’
கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு: 1 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் கடும் அவதி’
குறிப்பாக, புறநிலை வினாத்தாளில் 150-க்கு 111 மதிப்பெண் பெற்ற தமிழ் பிரிவைச் சேர்ந்த ஒரு தேர்வருக்கு, கட்டுரைத் தாளில் பூஜ்ஜிய மதிப்பெண் வழங்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு நேர்மாறாக, புறநிலை வினாத்தாளில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற தேர்வர்களுக்கு, 50 மதிப்பெண்களுக்கான விளக்கக் கட்டுரை மதிப்பீட்டில், 50-க்கு 49 வரை அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும், இது அவர்களின் இறுதித் தரவரிசையை மாற்றியமைத்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
“புறநிலை வினாத்தாளில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஒரு தேர்வர், விளக்கமுறை வினாத்தாளில் எப்படி பூஜ்ஜியம் மதிப்பெண் பெற முடியும்? அல்லது இதற்கு நேர்மாறாக எப்படி நடக்க முடியும் ? மதிப்பெண்கள் சீரற்ற முறையில் வழங்கப்பட்டுள்ளன என்பதை இது பிரதிபலிக்கிறது. படித்த இளைஞர்களின் எதிர்காலத்துடன் TRB விளையாடுகிறது” என்று தேர்வு எழுதியவர்களும், தமிழ் நாடு அரசு கலைக் கல்லூரி சிறப்பு விரிவுரையாளர் சங்க நிர்வாகிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.
“பல வருடக் காத்திருப்புக்குப் பிறகு, வேலை பெறுவதற்காக நாங்கள் இந்தத் தேர்வை எழுதினோம். ஆனால், இந்தத் தன்னிச்சையான மதிப்பீடு எங்கள் எதிர்காலத்தை ஒரு முச்சந்தியில் நிறுத்தியுள்ளது,” என்று கட்டுரைத் தாளில் ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் புகார் கூறியுள்ளனர். மதிப்பெண்களுக்கான விளக்கக் கட்டுரை மதிப்பீட்டில் குறைந்த மதிப்பெண் வழங்கியதன் மூலம், TRB நடத்திய உதவிப் பேராசிரியர் தேர்வில் விளக்கக் கட்டுரை மதிப்பீட்டில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விளக்கத் தாளுக்காகப் பயன்படுத்தப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்கள், மாதிரி விடைகள் மற்றும் மதிப்பெண் வழங்கும் முறை ஆகியவற்றை TRB பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும், வெளிப்படையான மறுமதிப்பீடு நடத்தப்பட வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
50 சவீதத்திற்குமேல் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அரசு கல்லூரியின் கற்பித்தல் திறன் குறைந்து, மாணவர்கள் தனியார் கல்லூரிகளை நோக்கி படையெடுப்பது அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக, எனது தலைமையிலான அம்மா அரசின் ஆட்சிக் காலத்தில், 2019-20 கல்வி ஆண்டில், இந்திய அளவில் உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை 51.4 சதவீதமாக உயர்ந்து முதலிடத்தில் இருந்தது.
இந்நிலையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த TVK அரசு, கல்லூரி மாணவர் சேர்க்கைகளுக்கு இன்றுவரை சரியான வழிமுறை வழங்காத காரணத்தினால், இந்தாண்டு 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட்டு 60 நாட்கள் கடந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 45 சதவீத இடங்கள் காலியாக உள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
வருங்கால மாணவச் செல்வங்களுக்கு பாடம் கற்பித்து வழிகாட்டியாக இருக்கக்கூடிய உதவிப் பேராசிரியர்கள் தேர்வில், இது போன்ற முறைகேடுகள் நடைபெற்றால், கற்றல், கற்பித்தல் முறையில் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதுடன், அரசு கல்லூரிகளில் சேர்ந்து அதிக அளவு பயனடையும் ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினரின் எதிர்காலமும், நாட்டின் முன்னேற்றமும் கேள்விக்குறியாக மாறிவிடும்.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. என்ற குறளை நினைவுபடுத்துவதுடன், தகுதியான தேர்வர்களை நீக்கிவிட்டு, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்குச் சாதகமாக வெளியிடப்பட்ட தேர்வு முடிவினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மேலும், இது குறித்து சுதந்திரமான முழு விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும், விசாரணை முடியும் வரை அனைத்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவேண்டுமென்றும் TVK அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
