Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்ப்பிணி மனைவியை தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்து கொலை

அரியானா மாநிலம் பரிதாபாத் பஞ்சசீல் காலனி பகுதியில் வசித்து வந்த அமித் குப்தா (26), டெல்லியின் லாஜ்பத் நகரில் கிராபிக் டிசைனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நேஹா குமாரி (23). 6 மாதம் கர்பிணியாக இருந்த நேஹா குமாரி, கடந்த வியாழக்கிழமை வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

நேஹாவின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அமித் குப்தா, அவரை தண்ணீர் பக்கெட்டில் தலையை அமுக்கி கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பியோடினார். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த சில மாதங்களாகவே நேஹாவை அவரது கணவர் திட்டமிட்டு சித்ரவதை செய்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘அமித் குப்தா தினமும் காலை 8.30 மணிக்கு வேலைக்கு செல்லும் போது வீட்டை வெளியில் பூட்டி விட்டு செல்வார். மாலை 7 மணிக்கு திரும்பும் வரை சுமார் 10 மணி நேரம் நேஹா வீட்டிற்குள்ளேயே சிறை வைக்கப்பட்டார். நேஹா யாரிடமும் பேசக்கூடாது, வெளியில் செல்லக்கூடாது என்பதில் அமித் பிடிவாதமாக இருந்துள்ளார். மேலும், நேஹாவின் தந்தை தனது சொந்த செலவில் நிலம் வாங்கி, அமித் குப்தா பெயரில் வீடும் கட்டி கொடுத்துள்ளார். மருத்துவ குழுவினர் நேஹாவின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். தலைமறைவாக உள்ள அமித் குப்தாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.

error: Content is protected !!