Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா… பூட்டப்பட்ட கரூர் அலுவலகம்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா... பூட்டப்பட்ட கரூர் அலுவலகம்

கரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் ராஜினாமா: பூட்டப்பட்ட கரூர் எம்எல்ஏ அலுவலகம்.

கரூர் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.ஆர். விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார், கடந்த ஜூன் 3-ஆம் தேதி திருவள்ளுவர் விளையாட்டு மைதானம் அருகே அமைந்துள்ள கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார் அதன்பிறகு அலுவலகம் வழக்கமாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் அதிமுகவைச் சேர்ந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, எம்.ஆர். விஜயபாஸ்கரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியது.

இந்த பரபரப்பான சூழலில், கடந்த சில நாட்களாக திறந்து செயல்பட்டு வந்த கரூர் எம்எல்ஏ அலுவலகம் இன்று பூட்டப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், வரும் வியாழக்கிழமை தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

குறிப்பாக, கடந்த 15-ஆம் தேதி எம் ஆர் விஜயபாஸ்கர் இடம் செய்தியாளர்கள் “தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளீர்களா?” என்ற கேள்விக்கு, “அதுபோன்ற தகவல்கள் முற்றிலும் தவறானவை” என்று எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ராஜினாமா செய்து மற்றும் கட்சியில் இனிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது கரூர் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!