Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருவதால் பரப்பரப்பு.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இன்று மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் புயல் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் நீதிமன்ற வளாகம், பொதுமக்கள் அமரும் இடம், செடிகள் நிறைந்த பகுதி, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!