Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆர்ப்பாட்டம்.. தஞ்சையில் திமுக நிர்வாகிகள் கைது

ஆர்ப்பாட்டம்.. தஞ்சையில் திமுக நிர்வாகிகள் கைது

தவெக அமைச்சர் சரத்குமார் போதை பொருள் பயன்படுத்தியதாக கூறி அவர் பதவி விலக வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் காவல் துறையினர் தடையை மீறி தஞ்சையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை பனகல் கட்டடம் முன்பு திமுக மாணவரணி அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழக மனித வள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் போதை பொருள் கசக்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதனை தொடர்ந்து அமைச்சர் மீது அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் திமுக மாணவரணியினர் அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஆர்ப்பாட்டததிற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி மாநகர மாணவரணி அமைப்பாளர் ராம்குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தன

error: Content is protected !!