தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனது அலுவலகத்திற்கு வேலைக்கு வந்த 21 வயது இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதி அரி நாராயணனை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அரசியல் மற்றும் சமூக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
