சென்னை அமைந்தகரை பகுதியில் தனது காதலியின் பிறந்தநாளுக்கு ஐபோன் பரிசளிக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட சரவணன் (24) கைது.
மாதவரம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் முயன்று 4வது முயற்சியாக மலர்விழி என்பவரின் மகளிடம் செயினை பறித்துச் சென்றுள்ளார். போலீசாரிடம் சிக்காமல் இருக்க முகத்தில் துணியை கட்டி, நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் | சென்று கொள்ளையடித்த அவர், அணிந்திருந்த வரிக்குதிரை வடிவம் கொண்ட சட்டை அடையாளம் மூலம் போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.
