Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே மதுரகாளியம்மன் கோவிலில் அம்மன் சிலையை பெயர்த்து திருட முயற்சி..

தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி அருகே வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள மதுரகாளியம்மன் கோயில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் நகைகள் ஏதும் இல்லாததால் அம்மன் சிலையை பெயர்த்து உட்பகுதியில் தங்கத்தகடுகள் இருக்கிறதா என்று திருட்டு முயற்சி ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி அருகே உள்ளது வண்ணாரப்பேட்டை கிராமம். இங்கு மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்த கோயில் அம்மன் சன்னதி இரும்பு கேட்டு பூட்டை மர்மநபர்கள் உடைத்து உள்ளே சென்று நகைகள், பணம் உள்ளதா என்று பார்த்துள்ளனர்.

நகை, பணம் ஏதும் கிடைக்காதால் அம்மன் சிலையை பெயர்த்து அதன் பீடத்தில் தங்கத்தகடுகள், வெள்ளித்தகடுகள், விலை உயர்ந்த பொருட்கள் வேறு ஏதாவது உள்ளதா என்று தேடிபார்த்துள்ளனர். ஆனால் எதுவும் கிடைக்காதததல் அம்மன் சிலையை சன்னதி உட்புறம் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இன்று அதிகாலை கோயில் வழியாக சென்றவர்கள் கதவு திறந்து கிடப்பது கண்டு அங்கு சென்று பார்த்தபோது அம்மன் சிலை பெயர்த்து கீழே கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடன் இதுகுறித்து வல்லம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் வண்ணாரப்பேட்டை, ஆலக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!