திருச்சி: அரசு பேருந்து மோதி லாரி ஓட்டுநர் பலி
திருச்சி மாவட்டம், நெம்பர் ஒன் டோல்கேட் அருகே, அரியலூரில் இருந்து வந்த அரசுப் விரைவு பேருந்து மோதியதில், தாளக்குடி முத்தமிழ் நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலு (60) பலத்த காயமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து கொள்ளிடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும் தப்பியோடிய பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தேடி வருகின்றனர்.
