வடக்கில் பாஜக பயன்படுத்தும் வாஷிங்மிஷன் ஒன்று தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டது என்று தவெகவை திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தங்களின் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்துள்ள நிலையில், இன்று முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலையில் தெவெகவில் இணையவுள்ளனர்.
இந்த நிலையில், தவெகவை விமர்சித்து திமுக எம்பி கனிமொழி வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற
‘வாஷிங்மெஷின்’ ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே… உண்மையா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில்
அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் லஞ்சம் கொடுத்து தடையை மீறி சட்டவிரோதமாக குட்கா விற்கப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் பெயரும் உள்ளது.
இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அவர் தவெகவின் இணைவதை கனிமொழி விமர்சித்துள்ளார்.
