கர்நாடகாவைச் சேர்ந்த செவிலியர் பிரியங்கா (29), தனது கணவரான மல்யுத்த வீரர் பசவராஜால் கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2024 டிசம்பரில் இவர்களுக்குத் திருமணம் நடந்த நிலையில், கணவர் குடும்பத்தினர் பிரியங்காவைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். “என்னை விட குண்டாக இருக்கிறாய்”, “குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது” என பசவராஜ் அடிக்கடி மனைவியை உருவக்கேலி செய்துள்ளார். இந்த நிலையில், மனைவி பிரியங்காவை அவர் கொடூரமாக கொலை செய்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
