திருச்சி, திருவரம்பூர் அரசு உதவிபெறும் பள்ளியில் பணியாற்றிவரும் பட்டதாரி ஆசிரியை ஊதிய உயர்வுக்கான நிலுவைத்தொகையை வழங்குவதற்காக, ரூ.30,000 லஞ்சம் பெற்ற திருச்சி மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் புகழேந்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் போலீசார் பரிந்துரை செய்தனர்.
