குற்ற வழக்குகள் நிர்வாகிகளுடன் த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவருடன் சென்ற கட்சி நிர்வாகிகள் இன்று சென்னையில், தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் அக்கட்சியில் இணைந்தனர்.
இந்த இணைப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களுடன் இணைந்த கரூரைச் சேர்ந்த மதன் என்பவர் மீது கரூரில் ஒரு கொலை வழக்கு, ஒரு போக்சோ (POCSO) வழக்கு மற்றும் ஒரு தாக்குதல் (அடிதடி) வழக்கு நிலுவையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்ற வழக்குகள் எதிர்நோக்கும் நபர்கள் கட்சியில் இணைக்கப்பட்டிருப்பது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதேவேளையில், இந்த வழக்குகள் அனைத்தும் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
