பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு எதிராக போஸ்டர்-கண்டித்து தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் எனக்கூறி மாணவர்களிடம் பணம் வசூலித்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்திக்கு எதிராக பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் என்ற அமைப்பினர் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டி இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் 50க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில் தலைமையாசிரியர் தெட்சிணாமூர்த்தி பள்ளியின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார் அவரை மாற்றம் செய்துவிட்டு இங்குள்ள முதுகலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பொறுப்புக்கு வர வேண்டும் என்பதற்காக தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி மீது வேண்டும் என்றே அப்பாண்டமாக குற்றம் சாட்டி இதுபோன்று தலைமை ஆசிரியருக்கு எதிராக போஸ்டர் ஒட்டி அவருக்கு கெட்ட பெயரை உண்டாக்கி வருகின்றனர். எங்களுக்கு மீண்டும் தட்சிணாமூர்த்தி அவர்கள் தான் தலைமை ஆசிரியராக இருக்க வேண்டும் அவரை மாற்றினால் எங்களது போராட்டம் கண்டிப்பாக தொடரும் என்றனர்
