காமெடி நடிகர் பாவா லட்சுமணனின் துயரமான நிலையை அறிந்து அமைச்சர் ராஜ்மோகன் அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். தங்குவதற்கு வீடின்றி தவித்து வரும் அவருக்கு MLA ஹாஸ்டலில் தனது அறையில் 6 மாதங்களுக்கு தங்க ராஜ்மோகன் அனுமதித்துள்ளார். ‘மாயி’, ‘வசீகரா’, ‘கன்னி ராசி’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பாவா லட்சுமணன், சர்க்கரை நோயால் அண்மையில் தனது காலில் 3 விரல்களை இழந்தார்
