கேரளம் மாநிலம் காசர்கோடு ஆனங்கூரில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக யூடியூபர் தான்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் சோதனையின்போது, தன்யாவின் கார் சாலையின் நடுவே அலட்சியமாக நிறுத்தப்பட்டிருந்தது. காவல்துறையினர் சோதனையிட அவரை நெருங்கியபோது, அவர் அங்கிருந்து காரை ஓட்டிச் சென்றுவிட்டார். நிறுத்துமாறு கூறியும் நிற்காமல் அதிவேகமாகச் சென்ற வாகனத்தைத் துரத்திச் சென்று காவலர்கள் மடக்கிப் பிடித்தனர். அவர் மது அருந்தியிருந்தது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.
