சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் ரவி மோகனின் இல்லத்தில், ரூ.2.5 லட்சம் திருட்டு நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரூ.3 லட்சம் பணம் மற்றும் வைரச் செயின் திருடு போனதாகவும் உதவியாளர், பணிப்பெண் உட்பட 5 பேர் மீது சந்தேகம் எனவும் ரவி மோகனின் மேலாளர் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில், அவரது கார் ஓட்டுநர் ரமேஷை நீலாங்கரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
