ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, கஞ்சா போதையில் 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த தஷிணாமூர்த்தி (23) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டி, மூதாட்டியின் வாயை துணியால் பொத்தி அவர் இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கைது செய்யப்பட்ட வாலிபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
