மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோவில், பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாததால் படகு விபத்துகள் தொடர்கின்றன. இந்நிலையில், கசாய் மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 80 பேர் மீட்கப்பட்ட நிலையில், 20 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட எஞ்சிய 100 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
