அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதிச்சடங்கு டெஹ்ரானில் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் இருந்து சுமார் 2 கோடி மக்கள் அஞ்சலி செலுத்தியதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்ற நிலையில், “பழிவாங்குவோம்”, “அமெரிக்கா ஒழிக”, “இஸ்ரேல் ஒழிக” என்ற கோஷங்கள் முழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
