திருவொற்றியூர் குப்பத்தில் புதிதாக வீடு கட்டுபவரிடம் பணம் கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகி..
நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் பெண் புகார்..
நாங்கள் இப்போதுதான் ஆட்சிக்கு வந்தோம் எங்களுக்கு பணத்தை கொடு இல்லாவிட்டால் வீடை கட்ட விடமாட்டோம் என தாவெக நிர்வாகி மிரட்டுவதாக காவல் நிலையம் முன்பு பெண் குழுரல்..
சென்னை திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த பெண் சிறுக சிறுக சேர்த்து வைத்து ஒரு வீடு கட்டலாம் என நினைத்த அந்தப் பெண்மணி வீடு கட்டத் தொடங்கியுள்ளார் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில்
வீட்டின் முன் பகுதி தளமானது சாலையில் வந்ததால் உடனே அதை சரி செய்து தளம் போடத் தொடங்கினர் அப்பொழுதுதான் அதே பகுதியைச் சேர்ந்த தாவெக வட்டச் செயலாளரான ராகுல் நான் தவிர்க்க நிர்வாகி நாங்கள் இப்பொழுது தான் ஆட்சிக்கு வந்துள்ளோம் எங்களுக்கு வீடு கட்டினால் பணம் கொடுக்க வேண்டும் என மூன்று நாட்களாக கூலித் தொழிலாளர்களை வேலை செய்ய விடாமல் 50 ஆயிரம் ரூபாய் மாமுல் கேட்டு மிரட்டி வருவதாகவும் இதனால் வீடு கட்ட முடியாமல் பெண்மணி வேதனையுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,
மேலும் கூலி தொழிலாளர்களை வைத்து ஒரு நாளைக்கு 1500 ரூபாய் கொடுப்பதாகவும் நானே ஏற்கனவே கூலி தொழில் செய்து தான் இந்த வீட்டை கட்டி வருவதாகவும் தன்னிடம் 50,000 ரூபாய் கேட்டு தராவிட்டால் மிரட்டுவதாக நிர்வாகி தனது வீட்டை கட்ட விடாமல் செய்து வருவதால் இதனால் வீடு கட்டுவது நிலையில் தங்கள் பிள்ளைகளை வாடகை வீட்டில் தங்கி படித்து வருவதால் எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் முன்னாடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் ஆளுங்க கட்சியை சேர்ந்த ஒரு வட்டச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் தயங்கி வருவதால் இதனால் தங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற வேதனையுடன் காவல் நிலையம் முன்பு உறவினர்களுடன் சேர்ந்து தனக்கு நீதி கிடைக்க வேண்டுமென செய்தியாளரிடம் தெரிவித்தார்.
