முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர் என கூறி, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் உரிமம் பெற்றுத்தருவதாக ரூ.200 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க பொருளாளரும் திமுக பிரமுகருமான முத்துக்குமாரின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சுமார் 1000 பள்ளிகளிடம் இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி:பாலிமர்
