Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் நெரிசல் – அரசு வேலை வழங்கும் முடிவு- சிபிஎம்-சிபிஐ எதிர்ப்பு

கரூர் நெரிசல் - அரசு வேலை வழங்கும் முடிவு- சிபிஎம்-சிபிஐ எதிர்ப்பு

முதல்வர் ஜோசப் விஜய் நாளைய தினம் கரூர் செல்லவுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட இருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என சிபிஐ எம்.பி. சுப்பராயன் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தவெக தலைவரான ஜோசப் விஜய் கரூரில் பரப்புரையில் ஈடுபட்ட சமயத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக 41 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் தமிழக முதல்வராக பொறுப்பேற்று 50 நாட்கள் கடந்துள்ள நிலையில், நாளைய தினம் கரூருக்கு செல்லவுள்ளார் ஜோசப் விஜய். இதனையடுத்து கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புகள் கிளப்பியுள்ளது. தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு விஜய் உதவலாம். அரசு பணிகள் வழங்குவது தவறான முடிவு என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கு சிபிஐ எம்பி கே. சுப்பராயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது சம்பந்தமான தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை அவர் பகிர்ந்துள்ளார். அதில் அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்து நடத்திய கூட்ட நெரிசல்களில் ஏற்படும் மரணங்களுக்கு அரசு வேலை வழங்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளை தோற்றுவிக்கும் என எச்சரித்துள்ளளார்.

அதோடு இந்த முடிவினை அதிகார துஷ்பிரயோகம் என்றே வரலாறு பதிவு செய்யும் எனவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தொடர்ந்து அரசிற்கு எதிர்காலத்தில் இந்த முடிவு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தும். இழப்பினை ஈடுகட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் சம்பந்தப்பட்ட கட்சிகளை சார்ந்ததாகும். அவைதான் அதை செய்ய வேண்டும். அப்படி ஈடு செய்வதற்கான முழுத்தகுதி படைத்த கட்சிதான் தவெக.

அந்த பொறுப்பினை நிறைவேற்றி முடிக்காமல் தட்டிக் கழித்துவிட்டு, அரசின் தலையில் அந்த பொறுப்பை சுமத்துவதை ஜனநாயக அரசியல் அமைப்பு ஏற்காது. இதுக்குறித்து தவெக அரசு ஆழமாக சிந்திக்க வேண்டும். இவ்வாறு தன்னுடைய பதிவில் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் சிபிஐ எம்பி சுப்பராயன். அவருடைய பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அதோடு தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ள சிபிஐ தரப்பில் இருந்து எதிர்ப்புக்குரல் வந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது. இதனைதொடர்ந்து சிபிஎம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!