கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தின் திருவல்லம் பகுதியில் இன்று நடந்த சாலை விபத்தில் நண்பர்களான 2 ஐடி ஊழியர்கள் உயிரிழந்தனர். எர்ணாகுளத்தைச் சேர்ந்த நவீன் சிபி (25) மற்றும் தொடுபுழாவைச் சேர்ந்த மிருதுளா (25) ஆகியோர் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியதில் உயிரிழந்தனர். இதில் மிருதுளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், நவீன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று நவீனின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
