நீலகிரி வனப்பகுதியில் ஆபத்தான ‘மேஜிக் மஷ்ரூம்’ போதை காளான்களைப் பயன்படுத்திய ஊட்டியைச் சேர்ந்த 4 கல்லூரி மாணவர்களைப் போலீசார் கைது செய்தனர். இதில் கைதான ஆகாஷ் என்ற மாணவன், கடந்த 2024-ல் காதலியுடன் போதை காளான் உட்கொண்டபோது, அவரது கண் முன்னேயே காதலி உயிரிழந்தார். அந்த வழக்கில் ஜாமீனில் வந்தும், போதை வெறி அடங்காமல் நண்பர்களுடன் மீண்டும் காளான் பறித்துப் பயன்படுத்தியபோது பிடிபட்டுள்ளார்.
