தமிழக முதல்வர் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஹான்ஸ்,குட்கா, சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்களை இளைஞர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டத்திற்கு இன்று தவெக தலைவர் ஜோசப் விஜய் வருகை தந்தார். இதையடுத்து, கரூர் வெண்ணைமலை அருகே உள்ள அட்லஸ் கடையரங்கம் மைதானத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் 5000 பேர் பங்கேற்றனர்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு கியூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது காலை முதல் பொதுமக்கள் இளைஞர்கள் பெண்கள் என பலர்

ஆர்வத்துடன் வருகை தந்தனர்.
அப்போது போலீசார் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்தனர் அப்போது இளைஞர்கள் ஹான்ஸ் குட்கா சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருப்பதை கண்ட போலீசார்

அதனை பறிமுதல் செய்து அவர்களை உள்ளே அனுப்பினர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
