டில்லியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், வாக்குறுதி அளித்தபடி பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கவில்லை என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்நிலையில், ஆகஸ்ட் 28 ரக்ஷா பந்தன் அன்று இத்தொகையை வழங்க டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் தவெக அரசு வாக்குறுதி அளித்த ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், விரைவில் அறிவிப்பு வரும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
