விருதுநகரைச் சேர்ந்த 33 வயது பெண்ணுக்கு, மூதாட்டியை பராமரிக்கும் வேலை இருப்பதாக கூறி மதுரை மாவட்டம் மேலூருக்கு வருமாறு ஒருவர் அழைத்துள்ளார். அங்கு சென்ற அவரை மோட்டார் சைக்கிளில் தாமரைப்பட்டி அருகே அழைத்துச் சென்றபோது, அங்கு இருந்த 4 பேர் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததுடன், நகை மற்றும் செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வேலை தருவதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டு பலாத்காரம்
